திருவண்ணாமலை ஜவ்வாது மலையில், அரசுக்கு சொந்தமான வன நிலத்தை தனிநபர்களுக்கு பட்டா செய்து தருவதாகக் கூறி மலைவாழ் மக்களை மிரட்டி, சுமார் ஒரு கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்ற 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஜவ்வாது மலையில், அரசுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர்களுக்கு பட்டா செய்து தருவதாகக் கூறி, மலைவாழ் மக்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ஜமுனாமரத்தூர், மேல்பட்டு, நாடானூர் ஆகிய மூன்று வனச்சரகங்களைச் சேர்ந்த வனச்சரக அலுவலர்கள் பிரபு, சுரேஷ், செங்குட்டுவன் உள்ளிட்ட 6 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டது.
சென்னை அலுவலகத்திற்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட வன அலுவலர் சுதாகர், லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் 3 வனச்சரக அலுவலர்கள் உள்ளிட்ட 6 பேரையும் அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
















