இசக்கி சுப்பையா ராஜினாமாவை திரும்பப்பெறும் கடிதத்தை தன்னிடம் கொடுத்திருப்பதாகவும், சட்டப்பேரவை முடிந்தவுடன் அதற்கான பதிலை அறிவிப்பதாகவும், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் “மாற்றுத்திறனாளி நல் ஆசிரியர்களுக்கு விருதுகள்” வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் புதிய கோணத்தில் தமிழ்நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். ஒவ்வொரு கோப்பு மற்றும் பிரச்சினைக்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர், சட்டப்பேரவை மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருப்பதாகவும், திங்கட்கிழமை முதலமைச்சரின் பதிலுரை இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.
ராஜினாமாவை திரும்பப்பெறும் விவகாரத்தில் இசக்கி சுப்பையா தன்னிடம் கடிதம் கொடுத்துள்ளதாகவும், சட்டப்பேரவை முடிந்தவுடன் அதற்கான முடிவை அறிவிப்பதாகவும் கூறினார்.
















