நேபாள வெள்ளப் பாதிப்பில் 275 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக,
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேபாள அரசு, அந்நாட்டில் உள்ள வெளியுறவு அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அவர் கூறினார். இதுவரை நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய 166 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்டவர்களின் பெயர்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சீனாவிலிருந்து இருந்து ஆயிரத்து 907 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாளத்திற்கு வந்துள்ளதாகவும், திபெத் பகுதியில் இந்தியப் பயணிகள் யாரும் சிக்கியிருக்கவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
















