கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், குழந்தை கிருஷ்ணனின் மழலைக் குறும்பும், கீதையின் ஆழ்ந்த ஞானமும் நம் வாழ்வை நல்வழியில் வழிநடத்தட்டும் என தெரிவித்துள்ளார்.
அவனது திருவருளால் ஒவ்வொரு இல்லத்திலும் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்து, நம் மனங்களில் நம்பிக்கையும் நல்லெண்ணமும் என்றும் நிலைத்திருக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.
















