நாட்டின் பாரம்பரிய அறிவுக்கும், தொழில் நுட்பத்திற்கும் இடையே பெரும் இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் சர்வதேச மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விழா மேடையில் சிறப்புரையாற்றினார்.
அப்போது இந்தியாவின் பாரம்பரிய அறிவுக்கும், நவீன பொறியியல் தொழில்நுட்பத்திற்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள், அரசியல்வாதி என எந்த பணியில் இருந்தாலும் மனிதத்தன்மையோடு செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
















