தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Oct 17, 2026, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 2, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதல்வர் ஜோசப் விஜய் தனது ‘தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், புதுக்கோட்டை மாவட்டம் ரங்கம்மாள் சத்திரம் அருகே, அரசுப் பேருந்தில் கூட்ட நெரிசலைக் காரணம் காட்டி, ஓட்டுநர் திடீரெனப் பேருந்துக் கதவைத் திறந்ததால் அதில் பயணம் செய்த எட்டுக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகள் படுகாயமடைந்துள்ள செய்தி நெஞ்சை உலுக்குகிறது என தெரிவித்துள்ளார்.

சமூக நீதி பேசும் இந்த மண்ணில், கல்வி பயில ஆர்வத்துடன் வரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு நேர்ந்துள்ள இந்த அநீதி, ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கே நேர்ந்த அவமானமாகும்.

தமிழகத்தின் பெண்களுக்கு அண்ணன் என்றும், மகன் என்றும் மேடைதோறும் பாச வசனம் பேசி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய் ஆட்சியில், பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களும் அவமரியாதைகளும் மலிந்துவிட்டன.

பள்ளி நேரங்களில் போதுமான பேருந்துகளை இயக்காமல், கூட்ட நெரிசலைக் காரணம் காட்டி மாணவிகளைத் தூக்கி எறிவதுதான் மாற்றத்திற்கான ஆட்சியா?

முதல்வர்  ஜோசப் விஜய் அவர்களின் மேடை வசனங்களுக்கும் நிஜமான நிர்வாகத்திற்கும் துளிகூடச் சம்பந்தம் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

இச்சம்பவத்திற்குக் காரணமான ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். காயமடைந்த மாணவிகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்குவதோடு, பள்ளி நேரங்களில் தடையின்றி கூடுதல் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத் துறைக்கு முதல்வர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கெண்டுள்ளார்.

இல்லையெனில், தமிழக மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்காகப் பாரதிய ஜனதா கட்சி வீதியில் இறங்கிப் போராடும் என நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.

Tags: Pudukkottai Districtnainar nagendran press meetRangammal Chathirambus driver suddenly opened the doorVijaytamilnadu cmtvktamilnadu bjp state president
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Next Post

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies