தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? - சிறப்பு தொகுப்பு!
Oct 18, 2026, 01:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 2, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தொங்கும் பனிப்பாறைகள் போன்ற இயற்கை பேரழிவுகளை சமாளிக்க தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள-திபெத் எல்லையில் நடந்த கொடிய பனிப்பாறை சரிவு மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து இமயமலை மாநிலங்களுடன் இணைந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சுமார் 2,500 கிலோமீட்டர் நீளமுள்ள இமயமலைப் பகுதியில் 858 க்கும் மேற்பட்ட தொங்கும் பனியாறுகள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, உத்தரகண்டின் அலக்நந்தா படுகையில் மட்டும் 219 தொங்கும் பனியாறுகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இமயமலையில் வெப்பநிலை உலகளாவிய சராசரியை விட வேகமாக அதிகரித்து வருவதால் பனிப்பாறைகளின் பிணைப்பு விரைவாக பலவீனமடைந்து வருகின்றன.

ஏற்கனவே இதன் காரணமாக 2021-ல் ஏற்பட்ட சமோலி விபத்து போன்ற திடீர் சரிவுகளும் அதன் விளைவாக இயற்கைப் பேரிடர்களும் ஏற்பட்டுள்ளன.

அதிகரித்துவரும் வெப்பநிலையும், மாறுபடும் மழைப்பொழிவுகளும் இமயமலைப் பனிப்பாறைகளின் உறுதித் தன்மையைக் குறைத்து விடுவதால் சில பனிப்பாறைகள் “தொங்கும் பனிப்பாறைகளாக” மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவை செங்குத்தான சரிவுகளில் வீற்றிருக்கும் இந்தப் பனிப் பாறைகள் தனித் தனியாகப் பிரிந்து சென்று மிகப்பெரிய பனிச்சரிவுகளை உண்டாக்கும் என்றும் கூறப் படுகிறது.

கண்டறியப்பட்ட இந்த பனியாறு சரிவுப் பாதைகளுக்கு மிக அருகிலேயே பத்ரிநாத், மனா போன்ற முக்கிய யாத்திரை மற்றும் சுற்றுலாத் தலங்கள் இருப்பதால், பனிச் சரிவுகளால் ஏற்படும் பாதிப்பும் அதிகமாகவே இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளன.

குறிப்பாக பனிச்சரிவால் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் உயரம் உத்தரகாண்டின் பத்ரிநாத்-மனா பகுதியில் 50 மீட்டரை விட அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இத்தகைய கடுமையான நிகழ்வு நடந்தால் அப்பகுதியில் உள்ள மொத்த குடியிருப்புகளையும் உள்கட்டமைப்புகளையும் முழுமையாக அழித்துவிடும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

இந்தப் பனிச்சரிவுகள், பனிப்பாறை ஏரி உடைப்பு, வெள்ளம் (GLOFs) போன்ற அடுத்தக் கட்ட ஆபத்துகளையும் ஏற்படுத்தும் என்று கண்டறியப் பட்டுள்ளது.

இந்த அலக்நந்தா படுகையில் பனிச்சரிவு தொடர்பான ஆபத்துகளுக்கு ஆளாகும் நிலை அடுத்த பத்தாண்டுகளில் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2000-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2030-க்குள் 120 சதவீதம் அதிகமான கட்டிடங்களும் உள்கட்டமைப்பு நிலப்பகுதிகளும் அபாயத்திற்கு உள்ளாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதே காலகட்டத்தில், இந்த அபாயகரமான பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை 17% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் தெளிவான எச்சரிக்கையை வழங்கியுள்ளதாக கூறியுள்ள விஞ்ஞானிகள்,நிலச்சரிவுகள், பனிச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்குகள் ஒன்றோடொன்று தொடர்புடைய ஆபத்தின் அடுக்குகள் என்றும் ‘தொங்கும் பனிப்பாறைகளை’ கூர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

பேரழிவுக்கும் தப்பிப்பிழைப்பதற்கும் இடையிலான வித்தியாசம் அதிர்ஷ்டம் அல்ல, தயார்நிலை, கண்காணிப்பு மற்றும் விரைவான நடவடிக்கை என்று ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.

ஆல்ப்ஸ் மலைத்தொடரைப் போல அதிநவீன நேரடி ரேடார் அமைப்புகள் மற்றும் தானியங்கி எச்சரிக்கை கருவிகள் இமயமலையின் மிக உயரமான மற்றும் கடினமான நிலப்பரப்புகளில் இன்னும் முழுமையாக நிறுவப்படவில்லை.

என்றாலும் இஸ்ரோவும் மத்திய நீர் ஆணையமும் இணைந்து அதிநவீன செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் இமயமலைப் பகுதியெங்கும் உள்ள பனிப்பாறைகள் மற்றும் பனியாறு ஏரிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

மேலும் பேரிடர் அபாயங்களைக் குறைக்க தேசிய பனி ஆறு ஏரி உடைப்பு, வெள்ளம் போன்ற அபாய மேலாண்மை திட்டத்தை மத்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படுத்தி வருகிறது.

Tags: rigorous monitoring measuresnepal floodshanging glaciersnepal flood newsAlaknanda basinnepal flood 2026nepal flood livenepal flood rainflood in nepalnepal flash floodIndianepal flood videoUttarakhandNational Disaster Management AuthorityNepal-Tibet borderHimalayan statesnepal flood
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

Next Post

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies