சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் - பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!
Sep 3, 2026, 12:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 3, 2026, 12:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் விஜய், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையங்கள், விளையாட்டு மருத்துவ மையங்கள் மற்றும் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என கூறினார்.

தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச போட்டிகளில் அதிகளவில் பதக்கங்களை வெல்லவும், ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான வீரர்களை உருவாக்கவும் இந்த மையம் உதவும் என குறிப்பிட்டார்.

மேலும், தமிழகத்தில் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

அங்கு சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத் தடம், நவீன உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும்,ஃபார்முலா 1, 2, 3, 4 உள்ளிட்ட சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளைக் கண்டறிந்து, பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகளை வழங்கி, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்கள் உருவாக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.

உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன பந்தய அரங்குகள் அமைப்பதன் மூலம் சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தித் தொழில், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் மேம்பட வாய்ப்புள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

Tags: cm vijay livecm vijay newscm vijay todaycm vijay eventcm vijay speechcm vijay latestcm vijay twitterLegislative Assemblycm vijay tvk newstamil nadu cm vijaycm vijay updatescm vijayworld-class 'Tamil Nadu Olympic Citycm vijay tvk
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ. 5 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல்!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ. 5 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல்!

அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் – புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

மேட்டூர் நீர் கடைமடை வரை செல்வது சந்தேகமே – பொன்.ராதாகிருஷ்ணன்

ஆசிய விளையாட்டு போட்டியில் தனிநபர் மற்றும் அணிகளுக்கான போட்டி என இரண்டு பிரிவிலும் பங்கேற்பேன் – பி.வி.சிந்து

சுருக்குமடி வலையை பயன்படுத்த முழுவதும் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies