வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் துணை நிர்வாக அதிகாரி லோகநாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடர் புகார்கள் பெறப்பட்டன. அதன் பேரில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
வங்கி லாக்கரில் ஆவணங்கள் இருப்பதாக சந்தேகித்த அதிகாரிகள் அதனை திறக்குமாறு வங்கி நிர்வாகத்திற்கு நோட்டீஸை வழங்கி உள்ளனர். மேலும் அவரை கைது செய்த அதிகாரிகள் நெல்லூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அலுவலத்திற்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
















