திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் லலிதா ஜுவல்லரியின் 65-வது கிளை பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது.
தென்னிந்தியாவின் முன்னணி நகைக்கடை நிறுவனமான லலிதா ஜுவல்லரி, சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிளைகளை அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 65-வது கிளையாக செங்குன்றத்தில் புதிய கிளை திறக்கப்பட்டது.
நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம். கிரண் குமார், தனது குடும்பத்தினரை வைத்து ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களது கடைகளில் நியாயமான விலையில் நகைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், வாடிக்கையாளர்கள் பிற கடைகளின் விலைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். மேலும், புதிய கிளையின் மூலம் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார்.
















