சென்னையில் மோசமான வானிலை காரணமாக, 6 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நடுவானில் வட்டமடித்தபடியே இருந்தன.
சென்னை மீனம்பாக்கம், பரங்கிமலை, நங்கநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன்கூடிய மழை பெய்தது.
இதனால் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கோழிக்கோடு, அகமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த 6 விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, அவை வானில் 10-க்கும் மேற்பட்ட முறை வட்டமடித்தபடியே இருந்தன. பின்னர் வானிலை சீரானதை தொடர்ந்து, அந்த 6 விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாகப் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.
















