இஸ்ரோவில் இருந்து அதிகாலை புதிதாக ஏவப்பட்ட GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிலையில், பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புவி கண்காணிப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், EOS-05 செயற்கைக்கோளை சுமந்து சென்ற GSLV-F17 ராக்கெட், இன்று அதிகாலை 2.55 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதனை பாராட்டிய பிரதமர் மோடி, இஸ்ரோவின் மற்றொரு சிறப்பான சாதனை என்றும், நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரோ மற்றும் இந்தியத் தொழில்துறையின் ஒத்துழைப்பு, நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
















