போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் முதன்மை விமானி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 4-ஆம் தேதி தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
நடுவானில் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானம் திடீரென 300 அடி கீழே சரிந்தது. இதனால் முன்னால் இருந்த இருக்கைகளில் மோதியதில் 24 பேருக்கு காயங்கள் ஏற்பட்டன. பின்னர் விமானம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு டெல்லியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் தலைமை விமானி சுதீப், போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை ஏர் இந்தியா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
















