ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  - சுனில் அம்பேகர்
Sep 5, 2026, 11:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 5, 2026, 10:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக அமைதி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்காக அனைவருடனும் உரையாட RSS தயாராக இருப்பதாக, அதன் அகில பாரதிய பிரசாரத் தலைவர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.

லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகரிக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதுடன், RSS-ன் நூற்றாண்டு கால அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதே RSS தலைவர் மோகன் பாகவத்தின் இங்கிலாந்து பயணத்தின் நோக்கம் என கூறினார்.

அரசுகளுக்கு இடையிலான தூதரக ரீதியிலான உரையாடல்களுக்குத் தனி முக்கியத்துவம் உண்டு என்றாலும், நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்த மக்களுக்கிடையிலான நேரடித் தொடர்பும் உரையாடலும் சம அளவில் அவசியமானவை என்று அவர் கூறினார்.

கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் அடிப்படையில் செயல்படும் உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பான ஆர்எஸ்எஸ், உலக அளவில் முக்கியப் பங்காற்ற முடியும் என்று அம்பேகர் குறிப்பிட்டார்.

அரசு அளவிலான உரையாடல்களுடன் இணைந்து, மக்களுக்கிடையிலான மற்றும் கலாச்சாரங்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாகவே பகவத்தின் இங்கிலாந்து பயணம் அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

மோகன் பகவத்தின் இங்கிலாந்து பயணத்தின் போது நடைபெறும் உரையாடல்கள், இந்தியாவின் கலாச்சாரக் கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கவும், தற்போது நிலவும் கருத்துகளைச் சரிசெய்யவும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, லண்டன் சென்றுள்ள மோகன் பாகவத், ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில் மற்றும் கல்சா ஜாதா குருத்வாராவுக்கு சென்ற நிலையில், ஜைனக் கோயிலுக்கும் செல்ல உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நாளை நடைபெறும் ‘Celebration of Oneness’ நிகழ்ச்சியில், இங்கிலாந்து முழுவதிலும் இருந்து 310-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் பங்கேற்க உள்ளதாக சுனில் அம்பேகர் தெரிவித்தார்.

மாறுபட்ட கருத்துகள் இருப்பது ஜனநாயகத்தில் இயல்பானது என்றும், தங்களுடன் உரையாட விரும்புவோருடன் RSS தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Tags: LondonRSS chief Mohan BhagwatSunil AmbekarSunil Ambekar pressmeetRSS's Akhil Bharatiya Prachar Pramukh
Share
Tweet
SendShare
Previous Post

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

Related News

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies