திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 7 பேர், கேரளாவுக்கு சுற்றுலா சென்ற நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
திருச்சூர் அருகே கைப்பமங்கலம் பகுதியில் நள்ளிரவு 11.50 மணியளவில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் அதிவேகமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநரும் உயிரிழந்தார். இதையடுத்து, தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் காரை உடைத்து உடல்களை மீட்டனர். சாலையில் போதிய வெளிச்சம் மற்றும் எச்சரிக்கை பலகைகள் இல்லாததே விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















