ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், லண்டனில் உள்ள குருத்வாராவிற்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒருபகுதியாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாராவிற்குச் சென்றார். அப்போது, அங்கு நடைபெற்ற வழிபாடுகளில் கலந்துகொண்ட அவர், சீக்கிய குருமார்களின் போதனைகளைப் போற்றி உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக பிரார்த்தனை செய்தார்.
















