ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எளிதில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளது.
ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோன நிலையில், 18.1 ஓவரில் 55 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல்அவுட் ஆனது.
இதையடுத்து 56 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி, வெறும் 8.4 ஓவரில் 57 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஸ்ரீ சரணி, பிரேமா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு வலுசேர்த்தனர்.
















