காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் 57வது கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் 57வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் வரும் 8ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. அதில், முந்தைய உத்தரவுகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
மேலும், கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு நிலவரம், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை அளவு மற்றும் நீரியல் தரவுகள் ஆகியவை அடிப்படையில் விரிவான விவாதம் நடத்தப்பட உள்ளது. அதே வேளையில் தமிழக தரப்பில் இருந்து காவிரியில் கூடுதல் நீர் திறந்துவிட கோரிக்கை வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















