சென்னை அடையாறு அருகே தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்ணாந்துறை பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகி கண்ணன் என்பவர் தனது அலுவலகம் முன்பாக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் கண்ணனை சுற்றிவளைத்ததோடு அரிவளால் பயங்கரமாக வெட்டியது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கண்ணனின் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் கற்களால் தாக்கி மர்ம கும்பலை தடுக்க முயன்றனர்.
இருப்பினும் தொடர்ந்து கண்மூடித்தனமாக அரிவளால் வெட்டிய 5 நபர்கள் கண்ணனை கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். ஆள்நடமாட்டம் மிகுந்த இடத்தில் ஆளும் கட்சியின் பிரமுகர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
















