முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பேச்சால் கொந்தளித்த திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரை சூழ்ந்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார். அப்போது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருந்ததாகவும் ஊழல், முறைகேடுகள் நடந்ததாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பேசிக்கொண்டிருந்தபோதே திமுக எம்எல்ஏக்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று முழக்கமிடத் தொடங்கினர். முதலமைச்சர் விஜய் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும், பேச அனுமதி வேண்டும் என்று திமுகவினர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் திமுகவினர் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
முன்னாள் வந்து அமளியில் ஈடுபட்ட போது திடீரென திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனை தடுக்கி விழுந்தார். அப்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் அவருக்கு கைகொடுத்து தூக்கி விட்டார்.
தொடர்ந்து முதலமைச்சர் விஜய் எழுந்து, திமுகவினர் பேச அனுமதி அளிக்கும்படி சபாநாயகரை கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் சபாநாயகர் திமுகவினருக்கு பேச அனுமதி அளிப்பதாக தெரிவித்தார். ஆனால் திமுகவினர் மீண்டும் கூச்சலிட்டதால் அனுமதி தரமாட்டேன் என திட்டவட்டமாக கூற, திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
















