நேபாள பேரழிவின் போது, இந்தியர்களுக்கு எதிராக இணையத்தில் வெளியிடப்பட்ட கருத்துகள் வெட்கக்கேடானது என, சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி இணையதளங்களில் சர்ச்சையான கருத்துகள் பதிவாகின.
இதுபோன்ற விமர்சனங்கள், இந்தியாவை இலக்காக கொண்ட இனவெறி தாக்குதல்கள் என சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுபோன்ற மோசமான கருத்துகளை சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் பதிவிட்டார்களா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.
எது எப்படி இருந்தாலும், அந்த கருத்துகள் வெட்கக்கேடானது, முற்றிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாதது என்றும் கூறியுள்ளார்.
இணையத்தில் பயன்படுத்தப்பட்ட சில சொற்கள் இந்தியர்களை இழிவுபடுத்துவதாக இருந்ததாகவும் சிங்கப்பூர்
உள்துறை அமைச்சர் கே. சண்முகம் தெரிவித்தார்.
















