பாஜக பற்றி பொய்யான தகவல்களை பரப்புவதை அமைச்சர் வன்னியரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், பீகார் தேர்தலுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பட்டியலின மக்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குழப்பி வருவதாக கூறினார். பட்டினம்பாக்கம் அருகில் புதிய தலைமைச் செயலகம் வந்தால் மீனவர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்தார்.
பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் எனவே விசிக தலைவர் திருமாவளவன் பொய் பேசுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நீங்கள் தொடர்ந்து பொய் பேசினால் நாங்கள் உண்மை பேச வேண்டி வரும் என்றும் வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்தார்.
















