இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது, பிரதமர் மோடி தெரிவித்த வாழ்த்துக்களை இலங்கை அதிபரிடம் பகிர்ந்து கொண்ட ராஜ்நாத் சிங், இலங்கையில் அனுர குமார திசநாயக்கவின் அரசு, 2 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு பாராட்டு தெரிவித்தார்.
இரு நாடுகளும் இரட்டையர்களாக மக்களின் நலக்காக தொடர்ந்து பணியாற்றும் என்றும், பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் செழுமைக்கு ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்
















