கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு, திடீர் மூச்சுத்திணறல் காரணமாக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு, 8 ஆயிரத்து 795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த சில வாரங்களாக நடைபெற்ற சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரிலும் அவர் பங்கேற்றிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















