அமெரிக்க இடைக்கால தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், ஒவ்வொரு வயது வந்த அமெரிக்கருக்கும் 5 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலத்தில் பாதி நிறைவடைந்த நிலையில், வரும் நவம்பரில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், குடியரசுக் கட்சி வெற்றி பெற்று காங்கிரஸின் இரு அவைகளையும் தக்கவைத்துக்கொண்டால், ஒவ்வொரு வயது வந்த அமெரிக்கருக்கும் 5 000 டாலர் வழங்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தொகையை அமெரிக்காவிற்குள் மட்டுமே செலவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். தேர்தலை முன்னிட்டு டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
















