தமிழக வெற்றிக் கழகம் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கடந்த 2024ம் ஆண்டு விஜய் தொடங்கிய நிலையில், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 35 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சியைப் பிடித்தது.
தேர்தல் ஆணையத்தின் விதிப்படி, ஒரு கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கு, குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளை பெறுவது அவசியமாகும்.
அந்த வகையில், தவெக தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே, ஒன்று புள்ளி எட்டு கோடி வாக்குகளை பெற்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6-ல் இருந்து 7-ஆக உயர்ந்துள்ளது.
திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க, நாம் தமிழர், தேமுதிக ஆகிய 6 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளாக உள்ள நிலையில், அந்தப் பட்டியலில் த.வெ.கவும் இணைந்துள்ளது.
மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளதால் வரும் இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர்களுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
















