மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் - புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
Oct 25, 2026, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 24, 2026, 01:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மோட்டார் வாகன விதிகளில் அதிரடி திருத்தங்களை மேற்கொண்டு புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடெங்கும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு, முகவரி மற்றும் வயது சான்றாக மாஜிஸ்திரேட் அல்லது நோட்டரி வழக்கறிஞர்களிடம் பெறப்படும் உறுதிமொழி பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு வந்தன.

இந்த நடைமுறையை தவறாக பயன்படுத்தி, சமூக விரோதிகள் போலியான முகவரிகள் மற்றும் தவறான பிறந்த தேதிகளை கொடுத்து உரிமங்களை பெற்று மோசடியில் ஈடுபட்டனர்.

முறைகேடுகளை அடியோடு ஒழித்து, சாலைப் பாதுகாப்பை பலப்படுத்தவும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தற்போது தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதன்படி, இனிமேல் இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு தனித்தனி வண்ணங்களில் டிரைவிங் லைசென்ஸ் வழங்க மத்திய அரசு வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இனிமேல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் மற்றும் வழக்கறிஞர் உறுதிமொழி பத்திரங்கள் முகவரி சான்றாக ஏற்கப்படாது. ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்ற சரிபார்க்கக்கூடிய ஆவணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மேலும், இணையவழி பாதுகாப்பான ஓட்டுநர் பயிற்சி தேர்வுக்கான தேர்ச்சி வரம்பு 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது

அதோடு, லைசென்சில் ரத்த வகை, செல்போன் எண் மற்றும் அவசர கால தொடர்பு விவரங்கள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்களின் திருத்தக் கோரிக்கைகளை அதிகாரிகள் 15 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்றும், 30 நாட்கள் வரை முடிவு எடுக்கப்படாத விண்ணப்பங்கள் தானாகவே அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்பட்டு தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Ministry of Road Transport and Highwayscentral governmentdriving licenseMotor Vehicles ActMotor Vehicles Rules.fraudulent address
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை – குருவாயூர் ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டி : மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் பயணிகள் சிறப்பு தொகுப்பு!

Next Post

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

Related News

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மதுரை – குருவாயூர் ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டி : மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் பயணிகள் சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

40 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – UPI மூலம் ரூ.1.5 கோடி பரிமாற்றம் நடைபெற்றதும் கண்டுபிடிப்பு!

அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் – ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தகவல்!

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 3 பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு 1.25 கோடி ஊக்கத்தொகை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

எதிர்கட்சிகளின் அராஜகத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் : எச்சரிக்கும் இந்திய வம்சாவளி அறிஞர்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies