தொடர் கனமழை எதிரொலியாக மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் அரசுப் பேருந்து சிக்கியதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நள்ளிரவு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் எதிரொலியாக, மேட்டுப்பாளையம் – உதகை மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பர்லியார் வழியாக சென்ற அரசுப் பேருந்து மண்சரிவில் சிக்கியது. இந்த விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். அரசுப் பேருந்து மண் சரிவில் சிக்கியதால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















