பதிப்புரிமை வழக்கில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பதிப்புரிமை உத்தரவை மீறியதற்காக இசையமைப்பாளர் இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி சரிகமா நிறுவனம் மனுத் தாக்கல் செய்தது.
இளையராஜா, நீதிமன்றத் தடை உத்தரவை மீறி குறிப்பிட்ட சில பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அவற்றுக்கு உரிமை கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலுக்காக இளையராஜாவை சிறையில் அடைக்கவும், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் சரிகமா நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
பறிமுதல் செய்யப்படும் சொத்துக்களை விற்று, அதன் மூலம் கிடைக்கும் தொகையை சரிகமா நிறுவனத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளது.
இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அனுப் ஜெயராம் பம்பானி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக இளையராஜா பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
















