கூடலூர் அருகே ஓவேலி வனச்சரகத்தில் சுற்றித்திரியும் ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் 21ஆவது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள தெய்வமலை, வட்டப்பாறை, பாரம், சூண்டிமலை, ஈசன்மலை, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் ட்ரோன் மூலம் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்தனர்.
ஏற்கனவே 171 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 18 கேமராக்களை பொருத்தியும், 13 கூண்டுகளை வைத்தும் வனப்பாதுகாவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே, புலியின் அச்சத்தால் 30 நாட்களுக்கும் மேலாக வேலைக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், புலியை விரைந்து பிடித்து இயல்பு வாழ்க்கையை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
















