பிரிக்ஸ் மாநாட்டையொட்டி ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோவிலிருந்து அதிகாலை டெல்லி வந்தடைந்தார்.
நாளை தொடங்கும் பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு, டெல்லிக்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் புதினை மத்திய இணையமைச்சர் கே.வி.சிங் வரவேற்றார். அதன்பின்னர் விடுதிக்குச் சென்ற புதின், இன்று பிற்பகலில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது வர்த்தகம், எரிபொருள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது. ஏற்கெனவே பிஷ்கெக்கில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இருவரும் சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் ஆலோசனையில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
















