மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், டி.எஸ்.பி உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி, விசாரணைக்காக தனிப்படை காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், வாகன ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில், மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தலைமை காவலர் இளையராஜா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய மதுரை மாவட்ட 5ஆவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து, நான்கு பேரையும் வருகிற 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி தாமோதரன் உத்தரவிட்டுள்ளார்.
















