கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 9 ஆயிரத்து 224 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 3 ஆயிரத்து 684 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 8 ஆயிரத்து 24 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், மைசூருவில் உள்ள கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு தொடர்ந்து 5வது நாளாக ஆயிரத்து 200 கன அடியாக நீடிக்கிறது. இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் 4 ஆயிரத்து 884 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 9 ஆயிரத்து 224 கன அடியாக அதிகரித்துள்ளது.
















