சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோயிலில் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் சதுர்த்தி விழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, தினமும் காலையில் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம் உள்ளிட்ட வாகனங்களிலும் விநாயகர் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆறாம் திருநாளை ஒட்டி சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருகி சுவாமி தரிசனம் செய்தனர்.
















