ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கபடி அணி அபார வெற்றிப் பெற்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பல்வேறுப் பிரிவுகளில் விளையாடி வருகிறது. அதில் வெற்றி பெற்றுப் பதக்கங்களையும் வென்று வருகிறது.
இந்நிலையில் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா முதல் முறையாக கபடிப் போட்டியில் பங்கேற்று உள்ளது.
இந்திய ஆண்கள் கபடி அணியில் பவன் செஹ்ராவத் தலைமையில் சுர்ஜித் சிங், அஸ்லாம் இனாம்தார், நவீன் குமார், பர்வேஷ் பைஸ்வால், விஷால் பரத்வாஜ், நிதிஷ் குமார், அர்ஜுன் தேஸ்வால், சுனில் குமார், நிதின் ராவல், சச்சின் தன்வார், ஆகாஷ் ஷிண்டே ஆகியோர் பங்கேற்றுள்ளன.
இன்று நடைபெற்றப் போட்டியில் இந்தியா வங்காளதேசத்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 37 புள்ளிகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தைத் தோற்கடித்து 55-18 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.
இந்திய பெண்கள் கபடி அணியில் அக்ஷிமா, ஜோதி, பூஜா, பூஜா, பிரியங்கா, புஷ்பா, சக்தி குமாரி, ரிட்டு நேகி, நிதி ஷர்மா, சுஷ்மா சர்மா, சினேகல் பிரதீப் ஷிண்டே, சோனாலி விஷ்ணு ஷிங்கட் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் கபடிப் போட்டியில் இந்தியா தென் கொரியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 55-18 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிப் பெற்றது.