இந்தியாவுக்கு ஒரு பயிற்சி ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தியாவில் வரும் 5ம் தேதி முதல் ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் மற்ற பிரிவை சேர்ந்த 2 அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகின்றன.
அந்த வகையில் இந்திய அணி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுவதாக இருந்தது. ஆனால், மழை குறுக்கிட்டதால் ‘டாஸ்’ போடாமலேயே அந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் நெதர்லாந்து அணியுடனான பயிற்சிப் போட்டிக்காக இந்திய அணி தயாராக இருந்தது.
‘டாஸ்’ போடும் நேரத்தில் இருந்து விட்டுவிட்டு மழை பெய்து வந்ததால், இந்த பயிற்சி ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எந்த பயிற்சி ஆட்டமும் விளையாட கைகொடுக்கவில்லை.
இந்திய அணி தனது துவக்க ஆட்டத்தில் அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடவுள்ளது.