பள்ளிப் படிப்பைச் சிறப்பாக முடித்தால் பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைகள் படைக்கலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக கோபால் நாயுடு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
பின்னர், பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சந்திரயான் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. ஆனால், அதைச் சிலர் வேண்டும் என்றே குறை கூறுகின்றனர். குறை சொல்பவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.
ஆனால், சந்திரயான் -3 செய்த சாதனை மிகப் பெரியது. இது மிகப்பெரிய சாதனையாகும். சந்திரன் நிலவின் தென்பகுதியில் இறங்கி சாதனை படித்தநாடு நமது பாரத நாடு மட்டுமே. இதனை உலகத்தில் உள்ள வேறு எந்த நாடும் செய்யவில்லை.
நமது அனைவருடைய எண்ணமும் வரும் 2047 -ஆம் ஆண்டு இந்தியா முன்னேறி நாடாக இருக்கவேண்டும் என்பதுதான். இதில், அனைவரின் பங்களிப்பு இருக்க வேண்டும். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
மேலும், பேசிய அவர், அவர், பள்ளிப் படிப்பைச் சிறப்பாக முடித்தால் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கலாம் என மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
மேலும், கோவை மாவட்டத்தில் பிரபல மகளிர் கலை கல்லூரியின் வைர விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பள்ளி மாணவிகளுக்கு சந்திரயான் விண்கல மாதிரி வடிவங்களை பரிசாக வழங்கினார். அதை மாணவிகள் ஆர்வமுடன் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர்.
இதனிடையே, கோவை கொடிசியா வளாகத்தில் வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் உதவிகளை வழங்கினார்.