தமிழகத்திலுள்ள ஆலயங்களை ஆக்கிரமித்து, அவற்றின் சொத்துக்கள் மற்றும் வருமானத்தை வைத்துக் கொண்டு, தமிழக அரசு முறைகேடாகப் பயன்படுத்துகிறது என்று, பிரதமர் மோடியே குற்றம் சாட்டியுள்ள நிலையில், இனியாவது ஆலயங்களில் அத்துமீறுவதை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிறுத்திக் கொள்ளுமா? எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, ஆலய நடைமுறைகளிலும், வழிபாடு முறைகளிலும் தொடர்ந்து அத்துமீறுவதைக் கண்டித்து கேள்வி எழுப்பியதற்கு, தமிழக பாஜக ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவரை
இன்று தடுப்பு காவலில் வைத்தார்கள்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, ஆலய நடைமுறைகளிலும், வழிபாடு முறைகளிலும் தொடர்ந்து அத்துமீறுவதைக் கண்டித்து கேள்வி எழுப்பியதற்கு, @BJP4Tamilnadu ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் திரு @BJPNach அவர்களை இன்று தடுப்பு காவலில் வைத்தார்கள்.
தமிழகத்திலுள்ள… pic.twitter.com/D5mupvEEnx
— K.Annamalai (@annamalai_k) October 3, 2023
தமிழகத்திலுள்ள ஆலயங்களை ஆக்கிரமித்து, அவற்றின் சொத்துக்கள் மற்றும் வருமானத்தை வைத்துக் கொண்டு, தமிழக அரசு முறைகேடாகப் பயன்படுத்துகிறது என்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியே இன்று நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இனியாவது, ஆலயங்களில் அத்துமீறுவதை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிறுத்திக் கொள்ளுமா? என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.