டெல்டா பகுதி என அழைப்படும் தஞ்சை, கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 51 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல், கொசுக்களால் பரவும் ஒரு வகை நோயாகும். இது வெப்பமண்டல பகுதி அல்லது மிதவெப்ப மண்டல பகுதிகளில் பரவுகிறது.
டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு கடும் இரத்தப் போக்கு, இரத்த அழுத்தத்தில் திடீர் வீழ்ச்சி மற்றும் மரணத்தைக் கூட ஏற்படுத்தும்.
ஒவ்வொரு வருடமும் உலகளவில் மில்லியன் கணக்கானவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, தென்கிழக்கு ஆசியா, மேற்கு பசிபிக் தீவுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
தற்போது, தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு சிலர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தஞ்சை, கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 13 பேருக்கும் அரசு மருத்துவமனையில் தனி வார்ட்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், டெங்கு அறிகுறிகளுடன் வந்த 51 பேருக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக அரசு அமைந்தது முதல் சுகாதாரப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக, டெங்கு காய்ச்சலை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.