ஆசிய விளையாட்டு உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரரைப் பாரத பிரதமர் பாராட்டியுள்ளார்.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் நேற்று உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது.
இதில் இந்திய அணியின் சார்பாக தேஜஸ்வின் சங்கர் பங்குபெற்றார். இவர் உயரம் தாண்டுதலில் 7666 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.
Congratulations to @TejaswinShankar for winning the much deserved Silver Medal in Men’s Decathlon Event at the Asian Games.
Such commitment and determination is indeed admirable, which will
motivate younger athletes to also give their best with sincerity. pic.twitter.com/nNRB2IQKEO— Narendra Modi (@narendramodi) October 3, 2023
வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரருக்கு பாரத பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ” ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான டெகாத்லான் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக தேஜஸ்வின் சங்கர்ருக்கு வாழ்த்துக்கள் . உங்களின் அர்ப்பணிப்பும் உறுதியும் உண்மையில் போற்றத்தக்கது, இது வருங்கால விளையாட்டு வீரர்களையும் தங்கள் சிறந்த அர்ப்பணிப்பை நேர்மையுடன் கொடுக்க ஊக்குவிக்கும்” என்று பாராட்டியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார். இதுக்குறித்து அவர், ” ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான டெகாத்லான் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று மில்லியன் கணக்கான விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தியதற்காக தேஜஸ்வின் சங்கருக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Kudos to Tejaswin Shankar. You have inspired millions of sportspersons by winning the Silver medal🥈in the Men's Decathlon at the #AsianGames2022. pic.twitter.com/sWc1o6M2mT
— Amit Shah (@AmitShah) October 3, 2023