19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைப்பெற்று வருகிறது. இதில் இந்தியா 14 தங்க பதக்கங்களை மட்டுமே வென்றிருந்த நிலையில் தற்போது 15 வது தங்கத்தை வென்றுள்ளது.
நேற்றுப் பெண்களுக்கான 5000 மீ ஓட்ட பந்தயம் நடைபெற்றது. இதில் இந்திய அணிய சார்பாக பாருல் சவுத்ரி பங்குபெற்றார். இதில் இந்திய வீராங்கனை 15:14.75 நிமிடத்தில் பந்தய இலக்கை கடந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
Proud of Parul Chaudhary for winning the Gold Medal in Women’s 5000m event.
Hers was a performance that was truly awe inspiring. May she keep soaring high and sprinting towards success. pic.twitter.com/hmgw1MqnaC
— Narendra Modi (@narendramodi) October 3, 2023
மேலும் இதற்கு முன்பு நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் பாருல் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதக்கம் வென்ற வீரர்கனைக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ” பெண்களுக்கான 5000 மீ ஓட்ட பந்தயதில் தங்கம் வென்ற பாருல் சவுத்ரியை நினைத்தால் பெருமையாக உள்ளது. அவரின் விளையாட்டு பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது. மேலும் அவர் விரைவில் மிக பெரிய உயரத்திற்கு செல்வர்” என்று பாராட்டியுள்ளார்.
The Golden run!
Bravo to Parul Chaudhary for winning the Gold medal🥇in Women's 5000m. You have yet again proven the indomitable spirit of our athletes. The country takes pride in you. pic.twitter.com/DLeiCdZKYu
— Amit Shah (@AmitShah) October 3, 2023
இவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார். இதுக்குறித்து அவர், ” பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற பாருல் சவுத்ரிக்கு வாழ்த்துக்கள் . எங்கள் விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத உணர்வை நீங்கள் மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். உங்களை நினைத்து நம் பாரதம் பெருமை கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.