பெண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிப் போட்டியில் தங்க வென்று அசத்திய இந்திய வீராங்கனை.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைப்பெற்று வருகிறது. இதில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்க பதக்கம் கிடைத்துள்ளது.
நேற்றுப் பெண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக அன்னு ராணி பங்குபெற்றார்.
இந்த போட்டியில் உத்ரபிரதேசத்தைச் சேர்ந்த அன்னு ராணி தனது நான்காவது முயற்சியில் 62.92 மீட்டர் வரை ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
மேலும் இந்தப் போட்டியில் இலங்கை அணி நதீஷா தில்ஹான் 61.57 மீட்டர் வரை எரிந்து வெள்ளி பதக்கமும், சீனாவின் ஹுய்ஹுய் லியு 61.29 மீட்டர் வரை எரிந்து வெண்கல பதக்கமும் பெற்றுள்ளனர்.
அன்னு ராணி 2019 யில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்தியர் ஆவார்.
மேலும் இவர் 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி ஆவார். அதுமட்டுமின்றி இப்போது நடைபெறும் ஆசிய விளையாட்டிலும் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனையாக திகழ்கிறார்.