ஆசிய விளையாட்டுப் வில்வித்தை போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்!
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைப்பெற்று வருகிறது. இதில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்க பதக்கம் கிடைத்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் தென் கொரியாவின் சேவோன் சோ மற்றும் ஜேஹூன் ஜூவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், இந்தியாவுக்கான ஜோதி சுரேகா, ஓஜாஸ் இணை 159-158 என்ற புள்ளி கணக்கில் தென் கொரியா அணியை வீழ்த்தி தங்கம் வென்று புதிய சாதனை படைத்தனர்.
First Gold Medal in Archery at the Asian Games!
Well done @VJSurekha and Ojas, for hitting the bullseye in the Mixed Team Compound event, leading to a perfect podium finish. Their exceptional skill, precision and teamwork has ensured great results. Congrats to them. pic.twitter.com/UHNOznTHwe
— Narendra Modi (@narendramodi) October 4, 2023
தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தைக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும். இந்தியா தற்போது 71 பதக்கங்களை பெற்றுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் முதல் தங்கம் வென்ற இந்திய வில்வித்தை வீரர்கள் ஜோதி வென்னம் சுரேகா மற்றும் பிரவின் ஓஜஸ் ஆகியோருக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.