டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம், வரும் 12-ஆம் தேதி கூடுகிறது.
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகம், கர்நாடகம் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் புது டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு அக்குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார். இது 88 -வது கூட்டமாகும்.
கடந்த 29 -ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது
இதனைத் தொடர்ந்து, 3,000 கன அடி நீர் திறக்கும் உத்தரவை ரத்து செய்யக் கர்நாடகா மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், வரும் 12 -ம் தேதி ஒழுங்காற்று குழுக் கூட்டம் கூட உள்ளது.
இதில், கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.