தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். இதில், தமிழகத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தத் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இது தொடர்பாக மனுதாரர், தமிழக அரசைத்தான் நாட வேண்டும். எந்த அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என மனுவை முடித்து வைத்தார்.