உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த, ஒரு கோடியே 63 இலட்சம் மதிப்புடைய, பிளாக் டைமண்ட் நெயில் பாலிஷ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகில் விலை உயர்ந்த பொருட்களின் மீது மக்களுக்கு எப்பொழுதும், ஆர்வம் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் விலை உயர்ந்த வாகனம், தொலைப்பேசி, ஆடைகள், வீடுகள், விலை உயர்ந்த காலணிகள் மற்றும் அணிகலன்கள் போன்றவற்றைக் கேள்விப்பட்டிருப்போம்.
அதனைச் செல்வந்தர்கள் சிலர் அதிகப் பணம் கொடுத்து வாங்குவதும் உண்டு, சிலர் அதை ஒரு முறையாவது கையில் தொட்டுப் பார்த்து விட வேண்டும் என்று நினைப்பதும் உண்டு. அந்த வரிசையில் தற்போது ‘நெயில் பாலிஷ்’ இடம்பெற்றுள்ளது.
பொதுவாகப் பெண்கள் தங்களை அழகுடனும், என்றும் மாறாத இளமையுடனும் வைத்துக் கொள்ள முயற்சி செய்வர். அதற்காக பல்வேறு அழகு சாதனங்களையும், ஆடை, அணிகலன்களையும் வாங்கி, தங்களை அழகுப்படுத்திக் கொள்வர்.
மேலும், சிலர் நகங்களைப் பராமரித்து, பல வண்ணங்களில் நெயில் பாலிஷ் போட்டுக்கொள்வார்கள். தற்போது, அவர்களுக்குப் பிடித்தமான வண்ணங்களில் நெயில் பாலிஷ்கள் அறிமுகமாகி வருகிறது.
அந்த வகையில் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிளாக் டைமண்ட் நெயில் பாலிஷ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அசச்சூர் என்ற பெயர் கொண்ட இந்த நெயில் பாலிஷின் விலை 1 கோடியே 63 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாயாகும். இந்த நெயில் பாலிஷை லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த வடிவமைப்பாளர், அசாச்சூர் போகாசியன் என்பவர் உருவாக்கியுள்ளார்.
விலை உயர்ந்த இந்த நெயில் பாலிஷைத் தூரத்தில் இருந்து பார்க்கும் போது, சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அதன் உள்ளே 267 கேரட் கருப்பு வைரம் சேர்க்கப்பட்டு உள்ளது.