ஆசியா விளையாட்டு வில்வித்தை போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்று அசதியுள்ளது இந்தியா.
சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விளையாட்டாக ஆசிய விளையாட்டுப் போட்டிக் கொண்டாடப்படுகிறது. 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது.
இதில் வில்வித்தையில் இந்தியா ஏற்கனவே ஒரு தங்க பதக்கம் வென்றிருந்த நிலையில் தற்போது மற்றொரு தங்கப் பதக்கம் வென்று அசதியுள்ளது.
இன்று மகளிருக்கான வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக ஜோதி, அதிதி மற்றும் பிரனீத் ஆகியோர் பங்குபெற்றனர். மூவரும் சிறப்பாக விளையாடி 230 – 228 என்ற கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளனர்.
இதற்கு முன்பு நடைபெற்றக் கலப்பு இரட்டையர் வில்வித்தைப் போட்டியில் ஜோதி சுரேகா, ஓஜாஸ் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு தங்கம் வென்றிருந்த நிலையில் தற்போது இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளதுக் குறிப்பிடத்தக்கது.