பொது மக்களுக்குப் பயன் தரும் வகையில், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம், நாடு முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தரமான, தூய்மையான வழங்கும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 7 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள், 11,866 ஊரக குடியிருப்புகளில் உள்ள ஒரு கோடி மக்களுக்கு விரைவில் குடிநீர் வழங்கப்பட உள்ளது. இதற்காக, 40 குடிநீர் திட்டப்பணிகள் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. தற்போது, ரூ.50 கோடி மதிப்பில் 7 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
2021-ம் ஆண்டு முதல் 2 மாநகராட்சிகள், 11 நகராட்சிகள், 38 பேரூராட்சிகள், 5,044 ஊரக குடியிருப்புகளுக்குக் குடிநீர் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, தரமான தூய குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால், பொது மக்கள் மத்திய அரசுக்கும், பாரதப் பிரதமர் மோடிக்கும் மிகுந்த நன்றி தெரிவித்துள்ளனர்.