பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜக மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைப் பெற்று வருகிறது .
சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் தமிழக பாஜக மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டத்திற்கு அண்ணாமலை வருகை தந்த போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்ணாமலைக்கு எலுமிச்சை மாலை அணிவித்து பூரணக் கும்ப மாியாதை வழங்கப்பட்டது.
அண்ணாமலை மாற்று திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார்.
பின்னர் பாஜக மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை உரையாற்றினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், என் மண் என் மக்கள் பாதயாத்திரை குறித்தும், ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் பாஜக, மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.