ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடிப் பதக்கங்களை வென்று வருகின்றனர்.
இதில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணியின் நீரஜ் சோப்ரா 88.88 மீட்டர் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கமும், கிஷோர் குமார் ஜெனா 87.54 மீட்டர் வரை ஈட்டியை எறிந்து வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து டோலிவுட்டில் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுக் குறித்து அவர் ” 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மீண்டும் தலை நிமிர்ந்து நிற்கிறது ! எங்கள் ஈட்டி எறிதல் நட்சத்திரங்கள் நீரஜ் மற்றும் கிஷோர் குமார் ஜெனாவுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மகேஷ் பாபுவின் இந்தச் செயலுக்கு விளையாட்டு இரசிகர்களும், மகேஷ் பாபுவின் இரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.